Thursday, April 8, 2010

கிளிநொச்சியில் லெ.கேணல் சந்திரன் அவர்களின் நினைவுத்தூபி, சிறுவர் பூங்கா இலங்கைப் படையினரால் அழிப்பு

கிளிநொச்சியில் உள்ள மாவீரன் லெ.கேணல் சந்திரன் அவர்களின் நினைவுத்தூபி இலங்கைப் படையினரால் அழிக்கப்பட்டு படைமுகாமாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் லெ.கேணல் சந்திரன் அவர்கள் இந்திய படையினரின் காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் நலனிற்காக உழைத்த இவர் பின்பு கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளாராக செயற்பட்டு வீரவரலாறானார்.
இவரின் நினைவாக கிளிநொச்சியின் நகர்ப்பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு, முன்னை நாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் அவர்களால் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
கிளிநொச்சியினை வல்வளைத்த இலங்கைப் படையினர் தமிழ் மக்களின் வரலாற்று இடங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். இதன் ஒரு கட்டமாகவே லெ.கேணல் சந்திரன் பூங்கா அழிக்கப்பட்டு அங்கு இலங்கைப் படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சிக்கு சென்று வரும் மக்கள்

சரத் பொன்சேகாவை நீண்டகாலம் சிறையில் வைத்திருக்க ஆளும் கட்சி திட்டம்: தே.ஜ.கூட்டணி

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை நீண்டகாலம் சிறையில் அடைத்து வைத்திருக்க மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது என்று தேசிய ஜனநாயக கூட்டணி தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் அதிபர் ராஜபக்சவும், இராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் போட்டியிட்டனர். இதில் ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற்று அதிபரானார்.
இதையடுத்து ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக பொன்சேகா மீது குற்றம் சாட்டப்பட்டு இராணுவ காவலில் வைக்கப்பட்டுள்ளார். இலங்கையில் நடந்த போரின்போது, வெளிநாட்டிலிருந்து ஆயுதங்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக பொன்சேகா மீது மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இந்த வழக்கை விசாரிக்க தனி இராணுவ நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சரத் பொன்சேகாவை பிரதமருக்குரிய வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளன.
தேர்தல் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுச் செயலர் விஜித ஹேரத் கூறுகையில், பாராளுமன்றத் தேர்தலில் பொன்சேகா வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்படுவார். பாராளுமன்ற கூட்டத்திலும் அவர் உரையாற்றத்தான் போகிறார். பொன்சேகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அவரை நீண்டகாலம் சிறையில் தள்ள ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது என்றார்.
தோ்தல் தொடர்பாக ஆளும் கூட்டணியைச் சேர்ந்த தேசிய விடுதலை முன்னணி கட்சித் தலைவர் விமல் வீரவன்ச குறிப்பிடுகையில்,
நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி பெற்றாலும், இராணுவ நீதிமன்றில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரது எம்.பி., பதவி செல்லாது என தெரிவித்துள்ளார்.

ஆர்யா : கோடியில் ஒரு வில்லன்

தெலுங்கில் ஆர்யா வில்லனாக நடித்த வருடு ஆந்திராவில் வெளியாகி நல்ல கலெ‌க்சனுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார் ஆர்யா. வருடு படத்தின் தயா‌ரிப்பாளர் பேசிய சம்பளத்தில் 7 லட்சத்தை தரவில்லை, அதை வாங்கித் தாருங்கள் என்பது புகா‌ரின் சாராம்சம்.
வருடு தயா‌ரிப்பாளருடன் பேசிய நடிகர் சங்கம் 7 லட்சத்தை ஆர்யாவுக்கு பெற்றுத் தந்துள்ளது. சம்பள பாக்கியை ஆர்யா கறாராக வாங்கிய பிறகு அனைவர் மனதிலும் ஒரு கேள்வி. வருடு படத்துக்காக ஆர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு?
பலரும் பலவிதமான பதில்களை கூறுகிறார்கள். ஆனால் உண்மை...?
ஒரு கோடியே இருபத்தைந்து லட்சங்கள் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள். தென்னிந்திய சினிமாவில் எந்தவொரு வில்லனும் இத்தனை பெ‌ரிய சம்பளத்தை பெற்றதில்லை என்கிறார்கள் தெலுங்குப் படவுலகில்.
வருடு படத்தில் ஆர்யா ஒப்பந்தமான போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தவர் எதற்கு வில்லனாக நடிக்கிறார் என்று சலித்துக் கொண்டார்கள். சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை என்பது இப்போதுதான் அவர்களுக்கு பு‌ரிந்திருக்கிறது.

Wednesday, April 7, 2010